சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் கமிட்டியின் கட்டுப்பாட்டை மீறி, முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், கனகசபைக்கு பக்தர்களுக்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு நடராஜ தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அறநிலையத் துறையின் உத்தரவை அமல்படுத்தக் கோரி, பொது தீட்சிதர் குழுவினர் மற்றும் நடராஜ தீட்சிதர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடராஜர் கோயிலை நிர்வகிக்க பொது தீட்சிதர்கள் குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகவும், அதில் அறநிலையத்துறை தலையிட முடியாது என்றும் பொது தீட்சிதர்கள் குழு சார்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோவிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தீட்சிதர் சஸ்பெண்ட் விவகாரத்தில் அறநிலையத்துறை எப்படி தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, மனுதாரர் நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்ட் காலம் முடிவடைந்தது. இவர் தில்லை காளியம்மன் கோவிலில் சேவை செய்து வந்ததாக பொது தீட்சிதர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. கோவில் நிர்வாகத்தில் தலையிட, அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது, இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்புக்கு அமையும் என, உத்தரவிட்டார்.