திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல ஆண்டின் 365 நாட்களும் ஏற்றது. எந்த மாதத்திலும், எந்த நாளிலும், எந்த நேரத்திலும் கிரிவலம் செல்லலாம். அனைத்தும் விசேஷம் என்றாலும், பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வதை பெரும்பாலானோர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பௌர்ணமி கிரிவலமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 11-ம் தேதி இரவு 8.47 மணி முதல் மே 12-ம் தேதி இரவு 10.43 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்காக 20 இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதை உள்ளிட்ட பக்தர்களுக்குத் தேவையான இடங்களில் போதிய கழிப்பறை, குடிநீர் வசதி செய்து தரப்படும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்கவும், தரமான உணவு வழங்கவும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.