சென்னை இஸ்கான், ஈசிஆர் கோவிலின் 44-வது ரத யாத்திரை விழா இன்று ஜூலை 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இந்த ரத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றது. சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேர் பல்லவாக்கம் ஈசிஆரில் (ரிலையன்ஸ் சூப்பர் ஸ்டோர் அருகில்) புறப்பட்டு நீலாங்கரை, கெடுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம் வழியாகச் சென்று இறுதியாக அக்கரை இஸ்கான் கோயிலை வந்தடைந்தது.
உங்கள் குல தெய்வம் யார் என்று தெரியவில்லையா? இந்த 1 காரியத்தை செய்தால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்!!
ஜெகநாதர், பலபத்ரா, சுபத்திரை தெய்வங்களைக் கொண்டாடும் இவ்விழா பக்தர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்கிறது என்று கூறலாம். சந்தோசத்துடனும் பக்தியுடனும் பாடிய சங்கீர்த்தனத்தின் ஒலியால் அந்த இடம் முழுவதும் ஆனந்த ஆர்ப்பாட்டம் என்று சொல்லலாம்.
“ரத யாத்திரை கொண்டாடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். ஜகந்நாதர், பாலபத்ரா, சுபத்திரை ஆகிய தெய்வங்களை சிறிய பல்லக்கில் சுமந்து செல்வது நமக்கு மிகவும் விசேஷமானது. இந்த ரத யாத்திரை வெறும் திருவிழா அல்ல; இது பக்தர்கள் அனைவருக்கும் தெய்வம் வருவதைக் குறிக்கிறது”.
தேர் இழுக்கும் போது, தெய்வத்தை இதயத்திற்கு நெருக்கமாக இழுக்கும் அனுபவம் கிடைக்கும். இந்த திருவிழாவின் போது பக்தி, அன்பு மற்றும் ஒற்றுமையை நினைவுபடுத்துகிறோம்” என்று இஸ்கான் சென்னை ஈசிஆர் கோவிலின் பிரதிநிதி கூறினார்.