வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10-ம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டன. திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஒரு இடத்திலும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு திருப்பதியில் உள்ள டோக்கன் வழங்கும் மையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டோக்கன் விநியோகம் தொடங்கியது. இந்நிலையில் சொர்க்க வாசல் தரிசனத்துக்கான இலவச டோக்கன் வினியோகம் வரும் 19-ம் தேதி நேற்றுடன் முடிவடைந்ததாக தேவஸ்தானம் அறிவித்தது. இதுகுறித்து, தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வரும் 20-ம் தேதி ஏழுமலையானை தரிசனத்துக்கு, 19-ம் தேதி சர்வ தரிசன டோக்கன் வழங்கப்படாது.
ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் 19-ம் தேதி விநியோகிக்கப்படாது. ஏழுமலையானையை தரிசனம் செய்ய விரும்பினால், பக்தர்கள் நேரடியாக சர்வ தரிசனத்திற்கு செல்லலாம். வரும் 20-ம் தேதி வரை பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது” என்றார்.