திருமலை: திருப்பதி லட்டு பிரசாதம் கலந்த நெய் விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு நேற்று விசாரணையை தொடங்கியது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் அனுப்பப்பட்டதை விசாரிக்க ஆந்திர மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது.
குண்டூர் ஐஜி சர்வாஷ் ரெஷ்த் திரிபாதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு நேற்று முதல் விசாரணையை தொடங்கியது. இந்த குழுவினர் நேற்று காலை திருப்பதி கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்று திண்டுக்கல் ஏஆர் பால் பண்ணையில் கலப்பட நெய் சப்ளை செய்ததாக தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்று பரிசீலித்தனர்.
இதைத்தொடர்ந்து பத்மாவதி விருந்தினர் மாளிகையில் செயல் அலுவலர் சியாமளா ராவுடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த ஆட்சியில் நெய்க்கு டெண்டர், நெய் வழங்கிய பால் நிறுவனங்கள் விவரம், ஏ.ஆர்.டெய்ரி விவரம், நெய் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்த விவரங்கள் போன்றவற்றை விசாரணை குழு சேகரிக்க உள்ளது.
திருப்பதியில் 3 நாட்கள் விசாரணை நடத்தும் குழுவினர், அதன் பிறகு திண்டுக்கல் ஏஆர் பால் நிறுவனத்திலும் விசாரணை நடத்துவார்கள்.