திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கோலாகலமாக துவங்கியது. அண்ணாமலையார் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் காலை 6 மணி முதல் 7.25 மணிக்குள் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து, காலை கண்ணாடி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு அதிமுகவினர் நந்தியில் சுவாமி பவனியும் நடக்கிறது. வரும் 5-ம் தேதி 2-ம் நாள் உற்சவத்தில் தங்க சூரியபிரப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் இந்திர விமானத்திலும் வீதியுலா நடக்கிறது.
3-ம் நாளான 6-ம் தேதி காலை நாக வாகனத்திலும், 7-ம் தேதி 4-ம் நாளான இரவு சிம்ம வாகனத்திலும், பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. பஞ்சமூர்த்தி வெள்ளி அன்ன வாகனத்தில் காட்சியளிக்கிறார். 5-ம் நாளான காலை திருவிழாவான 8-ம் தேதி கண்ணாடி காளை வாகனத்தில் சந்திரசேகரரும், 9-ம் தேதி 6-ம் நாளான வெள்ளி யானை வாகனத்திலும் சந்திரசேகரர் வீதியுலா நடக்கிறது.
7-ம் நாள் மகா தேரோட்டம் நடைபெறும். 10-ம் தேதி பஞ்சரதமும் மாட வீதியில் காட்சியளிக்கிறது. 8-ம் நாளான 11-ம் தேதி காலை சந்திரசேகரர் குதிரை வாகனத்திலும், மாலையில் பிச்சாண்டவர் குதிரை வாகனத்திலும், இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்திலும் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
9-ம் நாளான 12-ம் தேதி காலை சந்திரசேகரர் புருஷமுனி ரதத்திலும், இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச, காமத்தேனு ரதத்திலும் வாகனம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, உச்சகட்டமாக 13-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.