திருமலை: சமீபத்தில் ஆந்திர முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
அப்போது அவர், “முந்தைய ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட், விஐபி பிரிவியூ டிக்கெட், ஒப்பந்தப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவற்றில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள பல்வேறு துறைகளில் கடந்த 3 நாட்களாக விஜிலென்ஸ் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நல்ல திருப்பதி கோவிந்தராஜர் கோவில் நிலவுகளை இடித்துவிட்டு, ஸ்ரீபாதம், அச்சுதம் என இரண்டு புதிய விடுதிகள் கட்ட அனுமதி அளித்துள்ளனர். இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 3,000 கோடி மதிப்பிலான பணிகள் டெண்டர் விடப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரோஜா, பெத்தி ரெட்டி மற்றும் முன்னாள் அறங்காவலர்கள் மீதான முறைகேடு புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.