புரட்டாசி மாதம் தமிழர்களுக்கு மிகவும் உகந்த காலமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமானதாக கணிக்கப்படுகிறது. இம்மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விஷ்ணு பெருமாளை வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும். புரட்டாசி மாதம் பெருமாளுக்குக் கொண்டாடப்படுவதற்கு முக்கியக் காரணம் சூரிய பகவான் இந்தக் காலத்தில் கன்னி ராசியில் சஞ்சரிப்பதுதான்.
பொதுவாக இம்மாதத்தில் விரதம் அனுஷ்டித்து, சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி, மாவிளக்கு ஏற்றி, இனிப்புப் பொங்கல், பழங்கள் சமர்ப்பித்து வழிபடுவதால், பலம், புத்திர பாக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை. இம்மாதத்தில் நடைபெறும் பெருமாள் கோவில்களின் பிரம்மோற்சவ திருவிழா இந்த மாதத்தின் சிறப்பு மேலும் சிறப்பிக்கப்படுகிறது.
சனி பகவான் இந்த மாதம் முழுவதும் செல்வாக்கு மிக்கவராக இருப்பதால், சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது அனைத்து வகையான துன்பங்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் என்று கூறப்படுகிறது. புரட்டாசி மாத பலன்களை பெருமாள் கோவில்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே பெறலாம் என்பது ஐதீகம். இந்த சுபமாதத்தில் துக்கங்கள், பொருளாதார பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும்.