தஞ்சாவூர்: உலக பாரம்பரிய வார விழாவையும் முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தொல்லியல் துறை சார்பில் மரபு நடை மற்றும் தூய்மை பணி நடைபெற்றது.
உலக பாரம்பரிய வார விழா ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இந்திய தொல்லியல் துறை சார்பில் மரபு நடை மற்றும் தூய்மை பணி நடைபெற்றது.
தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அரவாழி, உதவி கண்காணிப்பாளர் முத்துகுமார், சங்கர், தஞ்சாவூர் பெரிய கோவில் தொல்லியல் துறை அதிகாரி சுரேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான சமூக ஆர்வலர்கள், சிவனடியார்கள், NCC மாணவர்கள் கலந்து கொண்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள குப்பைகள் மற்றும் மரச்செடி புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தினர்.
மேலும் ஒவ்வொருவரும் பாரம்பரிய சின்னங்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.