சென்னை: ரமலான் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால், நாளை மார்ச் 2 முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக ரமலான் இருந்து வருகிறது. புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இம்மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுவதும் நோன்பு இருந்து 30வது நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் இந்தாண்டு ரமலான் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால், நாளை மார்ச் 2 முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.