திருப்பதி: திருவிழா முடிந்து 5-வது வாரத்தில் திருப்பதி கெங்கையம்மனுக்கு முத்துக்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் திருவிழா ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி, மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கெங்கையம்மனை தரிசிக்க வருகின்றனர்.
கடந்த மாதம் திருவிழா நடைபெற்றது. திருவிழா முடிந்ததும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் திருப்பதி கெங்கையம்மனுக்கு திருவிழா போல் அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.
திருவிழாக் காலங்களில் வர இயலாதவர்கள் திருவிழா முடிந்த ஐந்து வாரங்களில் வந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம். ஐந்தாம் வார செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நேற்று திருப்பதி கெங்கைமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் திருப்பதி கெங்கையம்மன் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க முக கவசம் அணிவிக்கப்பட்டது. அம்மன் சன்னதி முழுவதும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். நேற்று ஐந்தாவது வாரம் என்பதால் திருப்பதி கெங்கையம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.