சென்னை : தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இன்று ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து, நாகூர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
அந்த வகையில், இஸ்லாமியர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர். குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இம்மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுவதும் நோன்பு இருந்து 30வது நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவார்கள்.
இன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகை கொண்டாடுவார்கள். ரமலான் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.