திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகவதியம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, 800-க்கும் மேற்பட்ட பெண்கள் மூலைபாரியை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் நையாண்டி மேளம், வாணவேடிக்கையுடன் கடவுள் வேடமணிந்து மஞ்சளாற்றில் சக்தி கரகம், மூலைபாரி கரைத்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சக்தி தலங்களுக்கு பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரணப்பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா பிரத்யங்கிரா சித்தர் சக்தி கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மிளகாய் பொடி உள்ளிட்ட பானங்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.