மேஷம்: நீண்ட நாட்களாக மனதில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வாகனச் செலவுகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து பரஸ்பர புரிதல் ஏற்படும்.
ரிஷபம்: யதார்த்தமாக பேசி அனைவரையும் கவர்வீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். மனைவி வழியில் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் விரைந்து முடிவடையும்.
மிதுனம்: உற்சாகமும், தோற்றமும், ஆளுமையும் அதிகரிக்கும். சவாலான பணிகளை சாதாரணமாக முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கடகம்: எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் மற்றும் அந்நிய மொழி பேசுபவர்கள் மாற்றத்தை கொண்டு வருவார்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்: தேவையற்ற குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடையே இருந்த கூச்சல், குழப்பம் தீரும். பேச்சில் பொறுமை தேவை.
கன்னி: எடுத்த காரியத்தை முடிக்கும் முன் அலைச்சல், பதட்டம் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை கவனிக்க வேண்டியிருக்கும். உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும்.
துலாம்: குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை யாரிடமும் பேச வேண்டாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு மற்றும் வங்கி விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் நட்பைப் பெறுவீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும்.
தனுசு: கடந்த கால இனிமையான அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக இருக்கும். விருந்தினர் வருகையால் வீடு அலங்கரிக்கப்படும்.
மகரம்: பழைய குடும்ப உறவுகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். உடன்பிறந்தவர்களின் உதவி உங்களுக்குக் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களை விமர்சித்தவர்கள் இப்போது உங்களைப் பாராட்டுவார்கள்.
கும்பம்: புதிய முயற்சிகள் வெற்றி பெறும். கணவன் மனைவிக்கிடையே அமைதி நிலவும். சொத்து பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
மீனம்: தேவையற்ற பயம், கவலை, மனக் குழப்பம் நீங்கும். பிறரிடம் சென்று நியாயம் பேச போகி உங்கள் பெயரை கெடுக்காதீர். பண விஷயத்தில் கண்டிப்புடன் இருங்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.