மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். ஆன்மிகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் தேக்க நிலையில் இருந்த பொருட்கள் விற்கப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் பகைமை கொள்ள வேண்டாம்.
ரிஷபம்: பொதுக் காரியங்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களைக் கேட்டு நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். தொழிலில் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
மிதுனம்: உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். உங்கள் மனைவி மற்றும் தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். தொழில் சம்பந்தமான பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கடகம்: சிறு சிறு வாய்ப்புகளை பயன்படுத்தி காரியங்களை சாதிப்பீர்கள். தாயாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் இடமாற்றம் பற்றிய செய்திகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய பொருட்கள் விற்கப்படும்.
சிம்மம்: அன்பானவர்களிடம் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கன்னி: தம்பதியர் நெருங்கி பழகுவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முடியும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
துலாம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து நீங்கும். உங்கள் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் வெற்றி பெறும். அலுவலகத்தில் வாக்குவாதம் வேண்டாம்.
விருச்சிகம்: எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளும் மன வலிமை பெறுவீர்கள். ஒரு புதிய தெம்பு பிறக்கும். நல்லவர்களுடன் நட்பு கொள்வீர்கள். தொழிலில் லாபம் காண்பீர்கள். அலுவலகத்தில் நிம்மதி இருக்கும்.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் நல்லதே நடக்கும். உங்கள் பேச்சில் அனுபவமும் அறிவும் வெளிப்படும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்: குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வீட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோக விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கி வசூலிக்க சிரமப்படுவீர்கள்.
கும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மன அமைதி பெறுவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில பணிகளை முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மீனம்: மனக்குழப்பம் மற்றும் மனக்கசப்பால் டென்ஷன் வரலாம். உங்கள் குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று நீங்கள் வருத்தப்படுவீர்கள். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்கள். வியாபாரம் ஓரளவு லாபம் தரும்.