மேஷம்: தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். உறவினர்கள், நண்பர்கள் வந்து பேசுவார்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
ரிஷபம்: திட்டமிட்ட வேலையை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தாரிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். அலுவலகப் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள்.
மிதுனம்: பிரபலங்களுடன் நெருங்கிப் பழகுவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பண வரவு இருக்கும். வணிக சங்கத்தில் முக்கியமான பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
கடகம்: உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். உங்கள் தொழில் வளம் பெறும்.

சிம்மம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள்.
கன்னி: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தியானத்தில் உங்கள் மனம் நிம்மதியாக இருக்கும். அலுவலகப் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள்.
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அந்நியர்களுடன் சிந்தித்து பழகவும். அலுவலகத்தில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டி வரும். வியாபாரம் சூடுபிடிக்கும், நல்ல லாபம் காண்பீர்கள்.
விருச்சிகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தொழிலில் ஈடுபடுவார்கள். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள்.
தனுசு: கோபத்தை தவிர்த்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுங்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
மகரம்: பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்கள் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழில், வியாபாரம் சாதகமாக இருக்கும்.
கும்பம்: அந்நிய மொழி, மதம் சார்ந்தவர்கள் மாற்றம் கொண்டு வருவார்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
மீனம்: உங்கள் பேச்சு அனுபவத்தையும் அறிவையும் வெளிப்படுத்தும். வேற்று மொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். புதிய கூட்டாளியின் உதவியால் தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.