மேஷம்: குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பண வரவு இருக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலிப்பதில் சிரமம் ஏற்படும். அலுவலகத்தில் தவிர்க்க முடியாத பயணங்கள் ஏற்படும். மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள்.
ரிஷபம்: சில பணிகளை திறமையுடன் முடிப்பீர்கள். மனக் குழப்பம் நீங்கும். தம்பதிகளிடையே பரஸ்பர புரிதல் இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே உங்கள் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள்.
மிதுனம்: அற்புதமாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். தம்பதியரிடையே இருந்த ஈகோ பிரச்சனை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
கடகம்: தடைபட்ட பிரச்சினைகள் சுமூகமாகத் தீர்க்கப்படும். வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்கள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள்.

சிம்மம்: தம்பதிகளிடம் விட்டுக் கொடுத்து விலகுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு வருத்தப்பட வேண்டாம். வியாபாரத்தில் கடன்களை வசூலிக்க சிரமப்படுவீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி: விடாமுயற்சியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் சூடுபிடித்து லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
துலாம்: தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். தம்பதியருக்குள் இருந்த ஈகோ பிரச்சனை தீரும். உறவினர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். கூட்டாளியின் ஆலோசனைப்படி தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் தொழில் வெற்றிகரமாக அமையும்.
விருச்சிகம்: அன்புக்குரியவர்களைச் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும்.
தனுசு: வீண் குழப்பங்கள் நீங்கும். வீட்டில் அமைதி நிலவும். எதிர்பாராத பணவரவு இருக்கும். பழைய கடன் பிரச்சனைகள் தீரும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
மகரம்: சில காரியங்களை மனநிறைவுடன் முடிப்பீர்கள். விருந்தினர்களால் வீடு நிரம்பி வழியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவர். அலுவலகத்தில் நீங்கள் விரும்பிய துறையில் மாற்றம் கிடைக்கும்.
கும்பம்: உங்கள் முகப் பொலிவு அதிகரிக்கும். சோர்வு நீங்கும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மீனம்: மற்றவர்களுக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். திடீர் செலவுகள் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லுங்கள். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்கள்.