மேஷம்: பிரபலங்களின் சந்திப்பு உங்களுக்கு மனநிறைவைத் தரும். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். பணியில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
ரிஷபம்: அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தம்பதியரிடையே மனக்குழப்பம் நீங்கி நெருக்கம் ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம்.
மிதுனம்: பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் கூறி மகிழ்ச்சி அடைவீர்கள். அன்பாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கடகம்: குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் தீரும். வியாபாரத்தில் முக்கியமான நபர்கள் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். ஓரளவு லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.
சிம்மம்: முடிக்காத பணிகளை முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.
கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கோபத்தைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க போராடுவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முக்கியமான ஆவணம் கிடைக்கும். உங்கள் மதிப்பு உயரும்.
துலாம்: சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். பணவரவு இருக்கும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களின் தொழிலில் மேன்மை உண்டாகும்.
விருச்சிகம்: உங்களை தவறாக எண்ணிய உறவினர்கள், நண்பர்கள் இப்போது உதவிகரமாக இருப்பார்கள். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலக விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்கள் மேலதிகாரி உங்களை பாராட்டுவார்.
தனுசு: விருந்தினர்களால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் அடைவீர்கள். அலுவலகத்தில் பல சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.
மகரம்: வரும் என நினைத்த பணம் வரும். மனைவி, பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய கடன்களை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் கோப்புகளை கவனமாக கையாளவும்.
கும்பம்: குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வாயு பிரச்சனைக்கு மருத்துவரை அணுகவும். பணியில் பணிச்சுமை இருந்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் சூழல் நிலையற்றதாகவே இருக்கும்.
மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மற்றவர்களை நம்பி அவர்களுக்கு பணிகளை கொடுத்தாலும், நீங்களே செய்து முடிப்பீர்கள். நீங்கள் அலுவலகத்தில் இருப்பதையும் உங்கள் சொந்த வேலை இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் விஷயமாக வெளியூர் செல்வீர்கள்.