மேஷம்: சமூகத்தில் பிரபலமான ஒருவரை சந்திப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த வேறுபாடுகள் தீரும். தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். பணியிடத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
ரிஷபம்: அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். எதிர்பாராத பணவரவு இருக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் குறையும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலையை இன்று முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும்.
கடகம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். வெளியூரில் இருந்த உறவினர்கள் விருப்பத்துடன் திரும்பி வருவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி வரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்: உங்கள் குடும்பத்திற்கு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாயு பிரச்சனைகளால் சில சிரமங்கள் ஏற்படலாம். வாகனத்தால் அடிக்கடி பணச் செலவு ஏற்படும். மேலதிகாரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும்.

கன்னி: முக்கியமான விஷயங்களில் நீங்கள் முன்னிலை வகிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆடை, நகைகள் வாங்குவீர்கள். எதிர்பாராத விதமாக ஒரு பால்ய நண்பரை சந்திப்பீர்கள். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
துலாம்: சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். உங்கள் குழந்தைகளின் மகிமையை மற்றவர்களிடம் கூறி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
விருச்சிகம்: உங்களைப் பற்றி தவறான எண்ணம் கொண்டிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மனம் மாறும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வேலையில் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில்கள் லாபத்தைத் தரும்.
தனுசு: சில முக்கியமான முடிவுகளை நீங்கள் தைரியமாக எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். தொழிலில் போட்டிகளை வென்று லாபம் ஈட்டுவீர்கள். வேலையில் சூழ்ச்சிகளை வெல்வீர்கள்.
மகரம்: நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொகை வரும். உங்கள் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் குழந்தைகளால் நீங்கள் நிம்மதி அடைவீர்கள். விருந்தினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும்.
கும்பம்: எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்படும்.
மீனம்: குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு மற்றும் வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும். தொழிலில் போட்டிகளைச் சமாளிக்க நீங்கள் சிரமப்படுவீர்கள்.