மேஷம்: சில பணிகளை முடிக்க போராடுவீர்கள். குழந்தைகளிடம் தேவையில்லாமல் கோபப்படாதீர்கள். அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். கவனம் தேவை.
ரிஷபம்: கடந்த காலத்தில் நீங்கள் செய்த உதவிகளுக்காக பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பைப் பெறுவீர்கள். தம்பதிகளிடையே பரஸ்பர புரிதல் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரம் செழிக்கும்.
மிதுனம்: நீண்டநாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வீட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அண்டை வீட்டாரின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வெளியூர் சென்று வருவார்கள். பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். மூதாதையர் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். பழைய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தாரால் மன அமைதி பெறுவீர்கள். அரசு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் குழப்பம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் சொந்த வேலை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
துலாம்: சுப நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தினர் வருகையால் வீடு நிறைவடையும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.
விருச்சிகம்: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சில அண்டை வீட்டாரின் செயல்களால் நீங்கள் கோபமும் எரிச்சலும் அடையலாம். தொழிலில் நிதானம் தேவை. அலுவலக வேலைகளை வீட்டிலும் செய்ய வேண்டியிருக்கும்.
தனுசு: உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகை இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். அலுவலகப் பயணம் திருப்திகரமாக இருக்கும். மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய பொருட்களை விற்று தீர்த்து வைப்பீர்கள்.
மகரம்: கோபத்தை தவிர்த்து புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்களுக்கு நம்பிக்கையைத் தருவார்கள். தந்தை வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
கும்பம்: மனக் குழப்பம் விலகும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டாகும். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள். பொறுப்பு அதிகரிக்கும்.
மீனம்: பணவரவு இருக்கும். நீங்கள் விரும்பியவர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் உயரும். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்கள்.