சென்னை: நாற்புறமும் பாதுகாக்கும் மதில்கள் இன்றி வெயில் படும்படி அமைந்திருக்கிறார் வெயிலுகந்த விநாயகர். இந்த பெயர் வர காரணம் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
சூரியனுக்கு, சிவனால் கிடைத்த தண்டனைக்கு பரிகாரமாக விநாயகரை நோக்கித் தவமிருந்ததாகவும், அதனால் மகிழ்ந்த விநாயகர், இந்திரனின் பாவத்தைப்போக்க அவன் விரும்பியபடி ஒளிக் கிரகணங்கள் தன் மீது பட்டு வழிபாடு செய்ய அருள் புரிந்ததாக புராணசெய்தி கூறுகிறது.
ராமநாதபுரத்தில் அமைந்துள்ள ‘உப்பூர் விநாயகர்’ மிகவும் சிறப்புமிக்கவர். இவரை சீதாபிராட்டியை மீட்கச்சென்ற ஸ்ரீராமன், தடைகள் இன்றி வெற்றி பெற வேண்டி பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு.
புராண காலத்தில் தட்சன் செய்த யாகத்தில் கலந்துகொண்ட சூரியனுக்கு, சிவனால் கிடைத்த தண்டனைக்கு பரிகாரமாக விநாயகரை நோக்கித் தவமிருந்ததாகவும், அதனால் மகிழ்ந்த விநாயகர், இந்திரனின் பாவத்தைப் போக்க அவன் விரும்பியபடி ஒளிக் கிரகணங்கள் தன் மீது பட்டு வழிபாடு செய்ய அருள் புரிந்ததாக புராண செய்தி கூறுகிறது.
இதன்படி சூரியனின் ஒளியில் வெயிலை உகந்து (விரும்பி) ஏற்று வீற்றிருக்கும் விநாயகருக்கு ‘வெயிலுக்குகந்த விநாயகர்’ என்ற பெயர் நிலைத்தது. அதுவே மருவி ‘வெயிலுகந்த விநாயகர்’ என்று ஆனது. இவ்வாலய சன்னிதியின் நாற்புறமும் பாதுகாக்கும் மதில்கள் இன்றி வெயில் படும்படி அமைந்திருக்கிறார், இந்த விநாயகர்.
இக்கோவிலின் தென்புறம் உள்ள திருக்குளம், பாவங்கள் போக்கும் ராமேஸ்வரத்தின் தீர்த்தங்களில் ஒன்றாகும். நவக்கிரகங்களில் முதன்மையானவரான சூரியபகவான் வணங்கும் விநாயகரை, நாமும் வழிபட்டு இந்தக் குளத்தில் நீராடும்போது நம் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். நம் காரியங்கள் யாவும் எந்த தடையும் இன்றி வெற்றி அடையும். பெரும்பாலும் பிரம்மச்சாரியாக வழிபடப்படும் விநாயருக்கு திருமணம் நடைபெறும் தலமாகவும் சிறப்பை பெறுகிறது உப்பூர்.