மேஷம்: குடும்பத்தில் இருந்து வந்த வாக்குவாதங்கள் மறையும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். நல்லவர்களின் நட்பைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பவர் நேசக்கரம் நீட்டுவார்.
ரிஷபம்: நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்கள் சுமூகமாக நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறவுகளிடையே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்: தேவையற்ற குழப்பம், அலைச்சல், அசதி, செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை. யாரிடமும் கடுமையாகப் பேசக் கூடாது. எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.
கடகம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளி வட்டத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தாமதமான பணிகள் உடனடியாக முடிவடையும். வியாபாரத்தில் போட்டி குறையும்.
சிம்மம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தாமதமான வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும்.
கன்னி: பழைய பிரச்சனை சுமூகமாக தீரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களுடன் பழகுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் சரியான நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள்.
விருச்சிகம்: புதிய நபர்களால் நட்பு மலரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சுமூகமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் பொருட்கள் விற்று தீரும்.
தனுசு: பழைய சம்பவங்களுக்காக வருந்துவீர்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். ஆன்மீகம் மற்றும் தியானத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
மகரம்: மனப் போராட்டம் முடிவுக்கு வரும். தகுந்த பேச்சு வார்த்தையால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சலசலப்பு நீங்கி மகிழ்ச்சி நிலவும். பணவரவு இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும்.
கும்பம்: தொட்ட காரியங்கள் தீரும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள், அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனே நிறைவேறும். ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும்.
மீனம்: பழைய நிகழ்வுகளை நினைத்து மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர புரிதல் இருக்கும். சகோதர வகையில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.