மேஷம்: விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் குடும்பத்தினரின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கவும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். தொழில், வியூக விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
ரிஷபம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி மகிழ்ச்சி நிலவும். நட்பு வட்டம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.
மிதுனம்: தடைகள் சுமூகமாக தீரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் சில பிரபலங்களை சந்திப்பீர்கள். உங்களின் தொழிலில் ஏற்றம் காண்பீர்கள்.

கடகம்: தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மூதாதையர் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பைப் பெறுவீர்கள். வியாபாரம் செழிக்கும்.
சிம்மம்: உங்களைச் சுற்றியுள்ளவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். உத்தியோகபூர்வ வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
கன்னி: குடும்பத்தாரால் மன நிம்மதி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தொழில் விஷயங்களில் முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் தாமதமான பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
துலாம்: வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முக்கியமான ஆவணம் கிடைக்கும்.
விருச்சிகம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். உள்ளூர் விவகாரங்களில் முதல் மரியாதை பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழில், வியாபாரம் வெற்றி பெறும்.
தனுசு: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். பழைய நண்பர்கள் உங்களை சந்திக்க வருவார்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பீர்கள். தொழில் சம்பந்தமான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
மகரம்: வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களுடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு உயரும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
கும்பம்: பேச்சில் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும்.
மீனம்: கோபத்தை தவிர்க்க வேண்டும். எல்லாவற்றிலும் அமைதியற்ற போக்கைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் யாருக்கும் அல்லது எதற்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கக்கூடாது. தொழில், வியாபாரத்தில் எச்சரிக்கை அவசியம்.