சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் சித்திரை மாதம் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்ஸவமும், ஆண்டுதோறும் ஆனி மாதம் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ள நரசிம்மப் பெருமாள் பிரம்மோற்சவமும் வெகு விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, நாள் முழுவதும் திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7.45 மணிக்கு புன்னை வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நாளை காலை 5.15 மணிக்கு நடக்கிறது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு ஏகாந்த சேவையும், 16-ம் தேதி சூர்ய பிரபை, சந்திர பிரபை நிகழ்ச்சியும் நடக்கிறது.

5v4r
x ḍzவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேர் வரும் 19-ம் தேதி நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்வார். காலை 7 மணிக்கு தேர் நடைபெறும். பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்பதால், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 22-ம் தேதி சப்தாவர்ணம் என்ற சிறிய திருத்தேர் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.