மேஷம்: எதிர்பார்ப்புகள் படிப்படியாக நிறைவேறும். பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் மன அமைதி உண்டாகும். திருமண முயற்சிகள் நல்லபடியாக முடிவடையும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
ரிஷபம்: சுபச் செலவுகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான மின்சாதனப் பொருட்களை வாங்குவீர்கள். இடப்பற்றாக்குறையால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நீங்கள் இப்போது சகல வசதிகளுடன் கூடிய வீட்டிற்கு மாறுவீர்கள்.
மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிரபலங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மீகம் ஆகியவற்றில் உங்கள் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணம் அமையும்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். ஆன்மீகத்தில் உங்கள் ஈடுபாடு அதிகரிக்கும்.
சிம்மம்: மூதாதையர் சொத்துப் பிரச்னைகளை அமைதியான விவாதங்கள் மூலம் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும்.
கன்னி: வீண் விவாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் மனைவி மூலம் உறவினர்களால் சங்கடமான சூழ்நிலை உருவாகலாம்.
துலாம்: சிறுவயது நண்பர்கள் சரியான நேரத்தில் உதவுவார்கள். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வெளி உலகில் புதிய அனுபவத்தைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவமும் அறிவும் வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள்.
தனுசு: கணவன்-மனைவிக்குள் உறவு அதிகரிக்கும். எதிர்பார்க்காத பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வந்து பேசுவார்கள். பங்கு வர்த்தகத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.
மகரம்: எதிர்பார்த்த பணம் வரும். தந்தையின் உடல்நிலை மேம்படும். புதிய பொறுப்புகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். நீடித்து வந்த சட்ட விவகாரங்கள் முடிவுக்கு வரும்.
கும்பம்: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்ய வேண்டி வரும். பழைய கடன்கள் தீரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மீனம்: எதிர்பாராத செலவுகளும், மன உளைச்சல்களும் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பேசுங்கள். அண்டை வீட்டாரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.