மேஷம்: கோபம் மற்றும் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் தன்னிச்சையாக புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். உங்களின் தொழிலில் நிம்மதி அடைவீர்கள்.
ரிஷபம்: தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக முடிவடையும். பழைய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். உங்களின் தொழிலில் சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள். உங்கள் மேலதிகாரி உங்களுக்கு ஆதரவளிப்பார்.
மிதுனம்: விலை உயர்ந்த கலைப் பொருட்களை வாங்குவீர்கள். மனைவிக்கு புது ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தீர்க்கமாகச் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உங்களின் தொழிலில் ஏற்றம் காண்பீர்கள்.

கடகம்: எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.
சிம்மம்: பழைய தங்கம், வெள்ளியை மாற்றி புதியவற்றை வாங்குவீர்கள். மனைவியின் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் வரவேண்டிய பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.
கன்னி: பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் பணியாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் நற்பெயர் உயரும்.
துலாம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சு கேட்கும். குலதெய்வத்தின் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
விருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் விரைந்து முடிவடையும். உங்கள் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர் உங்களைத் தேடி வருவார். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரம் செழிக்கும்.
தனுசு: மன உளைச்சல் தீரும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். உங்கள் தொழில் வளம் பெறும்.
மகரம்: தடைபட்ட வேலையை உற்சாகத்துடன் முடிப்பீர்கள். மகன், மகள் நலனுக்காக கடுமையாக உழைக்க வேண்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப செயல்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சொந்த ஊருக்குச் செல்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். உங்கள் தொழிலில் செழிப்பு இருக்கும்.
மீனம்: உங்கள் பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக டென்ஷன் இருக்கும். உங்கள் குடும்பத்தில் அக்கறையுடன் இருங்கள். வாகனம் செலவு உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களைப் பாராட்டுவார்.