மேஷம்: குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய கடன்களை சண்டையிட்டு வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களைப் பாராட்டுவார்.
ரிஷபம்: அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். தம்பதிகளிடையே பரஸ்பர புரிதல் இருக்கும். எதிர்பாராத வருமானம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். உங்கள் தொழில் வெற்றிகரமாக அமையும்.
மிதுனம்: திட்டமிட்ட காரியம் வெற்றியடையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வருமானம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
கடகம்: உங்கள் முகம் பொலிவு பெறும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வியாபாரம் சூடுபிடிக்கும், லாபம் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் நற்பெயர் உயரும்.
சிம்மம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவர்வீர்கள். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் உயர் பதவிக்கு முன்னேறுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.
கன்னி: உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். தொழிலில் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பணியிடத்தில் இடமாற்றம் ஏற்படும்.
துலாம்: விருந்தினர் வருகையால் வீட்டில் அமைதி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் பொருட்களை விற்று தீர்த்து வைப்பீர்கள். உங்கள் தொழில் வளம் பெறும்.
விருச்சிகம்: விரும்பியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கவனமாக இருக்கவும். பணியிடத்தில் உங்களின் பணிச்சுமை குறையும்.
தனுசு: மனக் குழப்பம் தீர்ந்து தெளிவு ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். பணியிடத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.
மகரம்: வீட்டில் புதிய எலக்ட்ரானிக் பொருட்கள், கலைப் பொருட்கள் வந்து சேரும். பழைய நண்பர்களால் லாபம் உண்டாகும். தம்பதிகளிடையே பரஸ்பர புரிதல் இருக்கும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கும்பம்: நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்த சில விஷயங்களை செயல்படுத்துவீர்கள். உங்கள் பிள்ளைகளின் நடத்தையில் நல்ல மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரம் வெற்றி பெறும்.
மீனம்: உங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று உணர்வீர்கள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். அலுவலகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.