மேஷம்: உங்களின் தனித்துவமான அணுகுமுறையால் தடைப்பட்ட வேலையை முடிப்பீர்கள். அதில் சில உங்களின் அவசர முடிவுகளே காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவு வேண்டாம்.
ரிஷபம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உங்கள் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும். வெளி வட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பழைய குடும்ப உறவுகள் உங்களைத் தேடி வரும்.
மிதுனம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழுதடைந்த வீட்டு உபயோகப் பொருட்களை மாற்றி புதியவற்றை வாங்குவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். பழைய கடன் பாக்கி கைக்கு வரும்.
கடகம்: உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு, வாகன கடன் உதவி கிடைக்கும். அரசு, வங்கி விவகாரங்கள் நல்ல முறையில் முடிவடையும்.
சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பேச்சு மதிப்பு பெறும்.
கன்னி: திடீர் பயணம் மற்றும் உறவினர்கள் வருகையால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் நிதானமான முடிவுகளை எடுப்பது அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
துலாம்: வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
விருச்சிகம்: குடும்ப உறவுகளின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்கள் முடிவுக்கு வரும்.
தனுசு: வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். பழைய குடும்ப உறவுகள் உங்களைத் தேடி வரும். பொது விஷயங்களில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மகரம்: எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்தடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் உறவுமுறை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
கும்பம்: வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகளும் வாய்ப்புகளும் தடைப்படும். குடும்பத்தில் யாரிடமும் வீண் வாக்குவாதம் வேண்டாம். பயணம் மகிழ்ச்சியையும் நன்மையையும் தரும்.
மீனம்: வெளி வட்டாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தாமதமான திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.