மேஷம்: பழைய நல்ல நிகழ்வுகளை நினைத்து மகிழ்வீர்கள். தம்பதியரிடையே பந்தம் ஏற்படும். தேவையற்ற கவலைகள் நீங்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். பணியில் மேலதிகாரி உங்களை பாராட்டுவார்.
ரிஷபம்: மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படும். மகளின் திருமணப் பேச்சு வார்த்தை சுமூகமாக நடக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைப்படி தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மிதுனம்: பழைய பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். பல நாட்களாக பார்க்க விரும்பிய ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே உங்கள் மரியாதை அதிகரிக்கும்.
கடகம்: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
சிம்மம்: குலதெய்வத்திடம் நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். நீங்கள் விரும்பாத இடத்திற்கு மாற்றப்படலாம்.
கன்னி: குடும்பத்தினர் உங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் நன்மை அடைவார்கள். உள்ளூர் விவகாரங்களில் முன்முயற்சி எடுப்பீர்கள். உங்கள் வாகனத்தை பழுது பார்ப்பீர்கள்.
துலாம்: குடும்ப விஷயங்களை முன்பின் தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். உங்கள் மேலதிகாரி உங்களுக்கு ஆதரவளிப்பார்.
விருச்சிகம்: கோபத்தை தவிர்த்து புத்திசாலித்தனமாக செயல்படவும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு நம்பிக்கையைத் தருவார்கள். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். தந்தை வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செழிக்கும்.
தனுசு: விரும்பியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல்நிலை மேம்படும். பணப் பற்றாக்குறை நீங்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மகரம்: புதிய நபரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உங்களின் தொழிலில் உயர்வைக் காண்பீர்கள்.
கும்பம்: தம்பதிக்குள் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். வருமானத்துக்கு அதிகமாக செலவுகள் ஏற்படும். சொந்த ஊரில் எதிர்ப்பு வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும்.
மீனம்: பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன்-மனைவி இடையே பந்தம் நிலவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்கள் வணிக கூட்டாளர்களிடம் ஆலோசனை கேட்கவும். கடன்கள் வசூலாகும்.