மேஷம்:
இந்த வாரம் நீங்கள் வியாபாரத்தில் நல்ல முறையில் செயல்படும் வாய்ப்புகள் உண்டாகும். வீட்டுமனை வாங்கும் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகப் பணிகளில் சற்று மன அழுத்தம் அனுபவிக்கலாம். தொழில்துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வேலை இடங்களில் இடையூறுகளை சமூகமாக பேசி தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9, 7, 6, 1

ரிஷபம்:
உத்தியோகத்தில் உங்களுக்கான சவால்கள் வரலாம். பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளின் உதவியால் மன நிம்மதி கிடைக்கும். அரசியல் துறையில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மற்றும் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்ப வண்டியை சீராக நடத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6, 1, 2, 9
மிதுனம்:
உங்கள் வேலை இடத்தில் அதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாகலாம். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருங்கள். பயணங்களின் போது பர்ஸ் பத்திரமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் நுரையீரல் பிரச்சனைகள் சரி செய்ய மருத்துவரை பார்க்கவேண்டும். குடும்பத்தில் சற்றே குழப்பம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5, 9, 4, 3
கடகம்:
திட்டமிட்டுப் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். வியாபாரப் பயணங்களில் நன்மையை பெற்றிடுவீர்கள். உழைப்பின் மூலம் அதிக வருமானம் வரும். தொழிலில் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிரிகளின் ஆசைகளை தவிர்ப்பீர்கள். பணவரவு அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2, 3, 8, 5
சிம்மம்:
நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். துணிச்சலான முயற்சிகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். அதிகாரிகளின் உதவியுடன் உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பெற்றோர்களின் ஆசீர்வாதம் உங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1, 7, 6
கன்னி:
எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் தாமதங்கள் ஏற்படும். கவலைகள் மனதை குழப்பும். முதலாளிகளின் அன்பை பெற உழைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5, 1, 2, 9
துலாம்:
வியாபாரத்தை விரிவுபடுத்த உங்கள் வேகம் அதிகரிக்கும், ஆனால் அதனை கட்டுப்படுத்துங்கள். பங்கு முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டாம். ரியல் எஸ்டேட் தொழிலில் சிக்கல்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் மன அழுத்தம் இருக்கும். ஆவணங்களில் கையெழுத்து போடும் போது கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6, 9, 4, 3
விருச்சிகம்:
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபத்தை பெற்று, தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். வேலைப்பளுவையும் அலைச்சலையும் குறைக்க முடியும். புதிய ஒப்பந்தங்களை பெற சாமர்த்தியமாக தந்திரம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9, 3, 8, 5
தனுசு:
உறவுகளில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்கவும், சமரச நிலையை ஏற்படுத்தவும் உங்கள் செயல்களில் கற்றல் உண்டு. உத்தியோகத்தில் உயர்வை அடைவீர்கள். கணவன் மற்றும் மனைவிக்கிடையே நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். பயணங்களில் சோர்வு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 3, 7, 6, 1
மகரம்:
குடும்பத்தில் ஏற்பட்ட கோபங்களை சமாளித்து, வியாபாரப் பயணங்களில் வெற்றி பெறுவீர்கள். முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை எறிந்து, தொழிலில் சிறந்த முன்னேற்றத்தை அடைவீர்கள். பைனான்சில் நாணயமாக நடந்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8, 1, 2, 9
கும்பம்:
ரியல் எஸ்டேட் தொழிலில் சிறப்பாக செயல்படுவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் பெறுவீர்கள். வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள். உற்ற நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும். திறமையான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 8, 9, 4, 3
மீனம்:
வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். பங்குதாரர்களுடன் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பீர்கள். எதிர்ப்புகள் தாமாகவே விலகும். திருமணப் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3, 8, 5