மேஷம்: இன்று மனக்கவலை, இதயத்தை அழுத்துவது போன்ற காரணங்களால் தூக்கம் இழக்க நேரிடலாம். தொழிலுக்குத் தேவையான பணத்தை திரட்டும் போது சிரமம் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் நிலவும் குழப்பமான போக்கால் முடிவு எடுக்கத் தடுமாறுவீர்கள். பணத்தைப் பராமரிக்காமல் விட்டால் இழப்பை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சற்று சறுக்கல்கள் ஏற்படும், இதனால் சங்கடம் பெருகலாம். அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 9, 7, 6, 1.

ரிஷபம்: சிறிய தொழிலை தொடங்கி அரசாங்கக் கடன் பெறுவீர்கள். வெளிவட்டாரப் பழக்கங்களால் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பள்ளிப் பிள்ளைகள் படிப்பில் அக்கறையாக செயல்படுவார்கள். அரசாங்க வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் கூடும். காதலிக்காக கடன் வாங்கி செலவு செய்வீர்கள், நண்பர்களிடமிருந்து உதவி பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 6, 1, 2, 9.
மிதுனம்: திடீரென்று பணம் வந்து, திக்கு முக்காடி போவீர்கள். தொழிலை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். வீட்டில் மக்களின் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணினித்துறையில் சாதனை நிகழ்த்துவீர்கள். பெரியோர்களின் அன்பையும் ஆசியையும் பெறுவீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் வருமானத்தை அதிகரிப்பவையாக இருக்கும். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 4, 3.
கடகம்: நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் நகைகள் வாங்கி சந்தோஷப்படுவீர்கள். சகோதர உறவுகள் உதவியால் பிரச்சனைகளிலிருந்து மீண்டுவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமையை விலக்குவீர்கள். அண்டை வீட்டாருடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 8, 5.
சிம்மம்: இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். தொழிலில் லாபம் பெறுவீர்கள். வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும் போது பணவரவு அதிகரிக்கும். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவார்கள். பங்குப் பரிவர்த்தனையில் முதலீடு செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 6.
கன்னி: வளர்பிறைச் சந்திரன் இருப்பதால் நஷ்டங்கள் குறையும். சின்னத் தோல்விகளை தாண்டி வெற்றியை அடைவீர்கள். நீர்க்கட்டி பிரச்சினைக்கு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும். தொழிலில் சுமாராக நிலை கொண்டிருக்கும். உறவினர்களின் உதவி இல்லாமல் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 2, 9.
துலாம்: அக்கறையாக வேலை செய்தாலும் மேல் அதிகாரிகள் குறை கூறலாம். பணியாளர்களின் சிரமம் அடைவீர்கள். மனைவி குறை சொல்வதால் வீட்டுக்கு வர விரும்ப மாட்டீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 6, 9, 4, 3.
விருச்சிகம்: நல்ல காரியங்களை சீராக நடத்தியபடியே நினைத்த உதவிகளை பெறுவீர்கள். தொழில் வளர்ச்சியடைந்து பழைய கடன்கள் அடைக்க வழி காண்பீர்கள். அரசாங்கத்தில் இடமாற்றம் உண்டு. வாக்குத்தவறாத நடத்தையால் செல்வாக்கை உயர்த்துவீர்கள். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம். அதிர்ஷ்ட எண்கள்: 9, 3, 8, 5.
தனுசு: தொடர்ந்த தோல்விகளை வெற்றியில் மாற்றுவீர்கள். பங்குப் பரிவர்த்தனைகளில் லாபம் ஈட்டுவீர்கள். லாட்டரி யோகமும் உண்டாகும். வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். வெளியூரிலிருந்து இனிப்பான தகவல் வந்து குடும்பத்தினரோடு குதூகலம் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 6, 1.
மகரம்: வேண்டாதவர்கள் செய்யும் தீங்கால் சித்ரவெட்டு ஏற்படும். பழைய பகையால் பாதிப்படைவீர்கள். தொழில்களில் ஏற்றம் காண்பீர்கள். பங்குப் பரிவர்த்தனையில் பலனை பெறுவீர்கள். தந்தையாருக்கு மருத்துவச் செலவு செய்ய வேண்டியிருக்கும். வெளியூர் பயணங்களால் விரய செலவு வரும். நண்பரின் உதவியால் நன்மை கிடைக்கும். சந்திராஷ்டம நாளாக இருக்கின்றது. அதிர்ஷ்ட நிறங்கள்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 8, 1, 2, 9.
கும்பம்: யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். முக்கிய முடிவுகளை ஒரு நாள் ஒத்தி வைக்கவும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். கடன் வாங்காதீர்கள். சந்திராஷ்டம நாள். அதிர்ஷ்ட நிறங்கள்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 8, 9, 4, 3.
மீனம்: வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்குவீர்கள். நகை வாங்க வேண்டிய ஆசையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் கேட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லாதவர்களுக்கு பண உதவி செய்து இன்பம் காண்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டால் அலுவலகத்தில் அந்தஸ்தை உயர்த்துவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 3, 8, 5.