மேஷம்:
நீங்கள் திட்டமிட்ட காரியங்களை தடங்கல் இன்றி நிறைவேற்றுவீர்கள். பொருளாதாரத்திற்குத் தேவையான உதவிகளை தேடிப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை உயர்வதால் லாபம் காண்பீர்கள். பெரியோர்களின் ஆசியால் உங்கள் பிரச்சனைகள் விலகி மனநிம்மதி அடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வேலை இடங்களில் பணி சுமூகமாகச் செல்வதுடன், மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். இன்று சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 9, 7, 6, 1.

ரிஷபம்:
கைப்பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள், இல்லையெனில் இழப்பை சந்திக்க நேரிடும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் தடை ஏற்படலாம், ஆனால் ஒரு நல்ல மனிதரின் உதவியால் அதை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சிறு பிரச்சனைகள் தோன்றினாலும், அதை உங்கள் திறமையால் சமாளிக்க முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை கொண்டு முன்னேற்றம் காண்பார்கள். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு நிறங்கள் உங்கள் அதிர்ஷ்ட நிறமாக அமையும். அதிர்ஷ்ட எண்கள்: 6, 1, 2, 9.
மிதுனம்:
நீங்கள் இனிமையாகப் பேசுவதன் மூலம் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் காட்டாமல் கவனமாக இருங்கள். வெளியூர் பயணத்தில் பலன் குறைவாகவே இருக்கும். குடும்பத்தில் குழப்பம் உருவாகலாம். யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் எதிலும் பொறுமை காட்டுங்கள். பச்சை, கருப்பு, மஞ்சள் நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாக அமையும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 4, 3.
கடகம்:
நினைத்த காரியம் எளிதாக நிறைவேறி மகிழ்ச்சி அடைவீர்கள். மங்கல நிகழ்ச்சியால் வீட்டில் சந்தோஷம் பொங்கும். பெற்றோர்களிடம் வாயார வாழ்த்துப் பெறுவீர்கள். பிள்ளைகளின் நடத்தையால் மனம் குளிர்ச்சியடையும். வேலைகளை சுலபமாக முடித்து நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை ஆகிய நிறங்கள் உங்கள் அதிர்ஷ்ட நிறமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 8, 5.
சிம்மம்:
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆனாலும், அனாவசிய செலவுகளால் கடன் வாங்க வேண்டி இருக்கும். உங்கள் விடாமுயற்சியால் வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். சொந்த முயற்சியில் புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். சிறு வியாபாரிகள் உழைப்பால் லாபம் பெறுவீர்கள். இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 6.
கன்னி:
வாக்குக் கொடுத்தால் அதை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் தலைகுனிவை சந்திக்க நேரிடும். சிறு தொல்லைகளால் சிரமப்பட்டாலும், குடும்பத்தினரின் ஆதரவால் மனநிம்மதி அடைவீர்கள். வங்கியில் பணம் பராமரிப்பதில் கவனம் தேவை. பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்கள் உங்கள் அதிர்ஷ்ட நிறமாக அமையும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 2, 9.
துலாம்:
எந்த காரியத்தையும் தடையின்றி நிறைவேற்றுவீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பாராத ஏற்றம் கிடைக்கும். வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலைகளில் அக்கறையுடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்கள் உங்கள் அதிர்ஷ்ட நிறமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 6, 9, 4, 3.
விருச்சிகம்:
உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். பணவரவு அதிகரிக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம் ஆகிய நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 9, 3, 8, 5.
தனுசு:
அனாவசிய செலவுகளால் அவதிப்படலாம். இருப்பினும் உங்கள் செல்வாக்கு உயர்வதை காண்பீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபட வேண்டாம். பங்குச் சந்தையில் சரிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடப்பதுடன், புதிய முயற்சியில் இறங்குவீர்கள். மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு ஆகிய நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாக அமையும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 6, 1.
மகரம்:
உடல்நலத்தில் சிறு பிரச்சனை இருக்கலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். பெற்றோரால் மன அழுத்தத்தை எதிர்நோக்குவீர்கள். கொடுத்த இடத்தில் பணம் திரும்பி வராமல் தாமதமாகும். வம்பு வழக்குகளால் காவல் நிலையம் செல்ல வேண்டி இருக்கலாம். கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்கள் உங்கள் அதிர்ஷ்ட நிறமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 8, 1, 2, 9.
கும்பம்:
மனைவியின் ஆதரவால் மனநிம்மதி கிடைக்கும். சிறிய விபத்தால் காயமடைவீர்கள். பணியாளர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். திடீர்ச் செலவால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். கவனக்குறைவால் பண இழப்புக்கு ஆளாகுவீர்கள். கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள் நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாக அமையும். அதிர்ஷ்ட எண்கள்: 8, 9, 4, 3.
மீனம்:
வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு நண்பர்கள் கேட்ட தொகையை அனுப்புவார்கள். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு நீங்கி உறவு பலப்படுவீர்கள். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். மஞ்சள், கருநீலம், பச்சை நிறங்கள் உங்கள் அதிர்ஷ்ட நிறமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 8, 5.