மேஷம்: பெண்கள் இந்த நாளில் மனத் துணிவுடன் காரியங்களை மேற்கொள்வீர்கள். மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க விரும்பி, கல்வியாளர்களின் ஆலோசனையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்நாளில் அலைச்சலால் அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கோபமாகப் பேசி பிரச்சனையை பெரிதுபடுத்துவீர்கள். எனினும், எச்சரிக்கையுடன் நடந்து வியாபார சிக்கலைத் தீர்ப்பீர்கள். அதிக முதலீடு செய்யாமல் சிந்தனையுடன் செயல்படுங்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 9, 7, 6, 1.

ரிஷபம்: தொழிலில் இடையூறுகளை சாதுரியமாக சமாளிப்பீர்கள். எந்த வகையான இக்கட்டான சூழ்நிலையையும் நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சிறப்பாக முன்னேறுவீர்கள். எதிர்பாராத இடங்களில் பண வரவு பெறுவீர்கள், இதனால் உங்கள் வங்கி சேமிப்பை உயர்த்துவீர்கள். குடும்ப சிக்கலை சமாதானமாகப் பேசி தீர்ப்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 6, 1, 2, 9.
மிதுனம்: இந்த நாளில் வியாபாரத்துக்காக வெளியூரில் தங்குவீர்கள். தந்தையின் உடல் நலத்திற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வீர்கள். உறவினர்களுக்கு உதவி செய்து உங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை செய்வீர்கள். வாக்கு வன்மையால் அனுகூலமான நிலையை பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 4, 3.
கடகம்: திறமையான செயல்பாட்டால் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் சலசலப்பை சந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சி பற்றிய சிந்தனைகளை அதிகரிப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி குறித்து கவலையுடன் இருப்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 8, 5.
சிம்மம்: விழிப்புடன் இருந்து வியாபாரத்துக்கு வர இருந்த நஷ்டத்தை தவிர்ப்பீர்கள். சிலர் பதவி உயர்வோடு உத்தியோக இட மாற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மனக்கலக்கம் அடைவீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகளை வெளிநாட்டில் இருந்து பெறுவீர்கள். அரசுத் துறைகளில் பணி அழுத்தம் அதிகரித்து சிரமப்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 6.
கன்னி: அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் வெளிவட்டாரங்களில் நல்ல பெயர் எடுப்பீர்கள். நண்பர்களுடன் உள்ள பிணக்குகளை விலக்கி, வீட்டில் சுப காரியங்களை நடத்துவீர்கள். உங்கள் பக்கம் நியாயம் இருப்பதை நிதானமாகப் பேசி புரிய வைப்பீர்கள். தொழிலை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று பணவரவை அதிகரிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 2, 9.
துலாம்: உங்களுக்கு வரவேண்டிய கடன் பாக்கியை வசூல் செய்வீர்கள். உடல் ரீதியான பாதிப்புக்கு மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அலுவலக நிர்வாகத்தில் சீர்திருத்தத்தை கொண்டு வருவீர்கள். கட்டுமானத்துறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விவசாயத் தொழிலில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். மின்சாரப் பொருட்கள் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 6, 9, 4, 3.
விருச்சிகம்: வேகமாக முடிக்க இயலாமல் சில பணிகளில் பின்னடைவை சந்திப்பீர்கள். இனிமையாக பேசி கணவன் மனைவிக்கு இடையே இறுக்கத்தை அதிகரிப்பீர்கள். அலுவலகச் சுமையால் குடும்பத்தைவிட்டு அந்நியப்படுவீர்கள். அரசு வங்கியில் இருந்து எதிர்பார்த்த லோன் தாமதமாக வரும். வியாபாரத்தில் சறுக்களை சந்திப்பீர்கள். சந்திராஷ்டம நாளாகும், எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம். அதிர்ஷ்ட எண்கள்: 9, 3, 8, 5.
தனுசு: ஆடை அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள். அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதலால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களை கவர்ந்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு உதவியாக இருப்பீர்கள். வீட்டில் உள்ளவர்களை சந்தோஷப்படுத்த அக்கறையோடு நடந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 6, 1.
மகரம்: அப்புறம் பார்த்துக் கொள்ளாமல், அனைத்து வேலையையும் முடிக்க அக்கறையோடு பாடுபடுவீர்கள். வேலை தேடி கொண்டு இருக்கும் அனைவருக்கும் உத்தியோக வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலக கடனுதவி பெற்று உங்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள். தோப்பு பராமரிப்பு பணியில் கவனத்தைச் செலுத்துவீர்கள். கட்டுமான வேலையை சிறப்பாக பார்ப்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 8, 1, 2, 9.
கும்பம்: ஏஜென்சி சம்பந்தப்பட்ட வேலைகளில் நல்ல வருமானம் பெறுவீர்கள். நிலம் வாங்கி விற்பதன் மூலம் கமிஷன் பெறுவீர்கள். வணிகத்தை விரிவாக்க உங்களுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். கதை, கவிதை, கட்டுரைகளில் ஈடுபடுவீர்கள். வேலையில் திறமையாகச் செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 8, 9, 4, 3.
மீனம்: முயற்சியை முடுக்கிவிட்டு முன்னேற்றமான காரியங்களை பார்ப்பீர்கள். அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகள் சாதகமாக நடைபெறுவன் மூலம் அரசியல்வாதிகளின் சந்திப்பால் சமுதாயத்தில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். காதலியின் மனம் கோணாமல் உறவை பலப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 3, 8, 5.