சென்னை: மஹாலட்சுமியின் அருளை வீட்டிற்குள் பெறுவதற்கென சில வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளன.
நவராத்திரி கொண்டாடப்படும் வேளையில் ஒன்பது இரவுகளில் மூன்று நாட்கள் லட்சுமியை துதிப்பதற்காக அர்ப்பணிக்கப்படுகிறது. செல்வமே வாழ்க்கை இல்லை என்ற போதும். செல்வம் என்பது வாழ்வாதாரத்திற்கான அடிப்படையாகிறது. எங்கே செல்வத்தின் வளம் செளகரியமாக இருக்கிறதோ அங்கே அடிப்படை தேவைகள் பூர்த்தியாகின்றன.
அடிப்படை தேவைகள் பூர்த்தியான ஒரு மனிதரால் ஆன்மீக பாதையில் நிறைவுடன் செல்ல முடியும் என்கிற கருத்தும் உண்டு. அந்த வகையில் செல்வத்தின் அதிபதியானவள் மஹாலட்சுமி. அவரின் இருப்பை ஒரு நிறைவான இல்லத்துக்குள் பெறுவது அவசியம். அவ்வாறு மஹாலட்சுமியின் அருளை வீட்டிற்குள் பெறுவதற்கென சில வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளன.
மஹாலஷ்மியானவள் மாலை ஆறுமணிக்கு மேல் நடமாடுவதாகக் ஐதீகம் அந்த நேரத்தில் யாருடைய வீடு சுத்தமானதாகவும் நறுமணம் நிறைந்ததாகவும் இருக்கிறதோ அங்கு சென்று தங்கி விடுவாள் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. இப்படி கண்களுக்கு தெரியாமல் இருக்கும் மஹாலஷ்மியை நம் வீட்டிற்கு வரவழைப்பதற்கு எளிமையான ஒரு வழிமுறை வாசனை பொருட்களை நம் அதிகம் வீட்டில் வைக்க வேண்டும் இந்த வாசனையானது நம் வாசலுக்கு வெளியில் செல்லும் அளவிற்கு இருக்க வேண்டும்.
தினந்தோறும் மாலை வேளையில் தீபத்துடன் சேர்த்து வாசனை மிகுந்த ஊதுபர்த்திகளை ஏற்ற வேண்டும் அதன் பிறகு ஒரு வெற்றிலை ஐந்து கிராம்பு ஐந்து பச்சை கற்பூரம் வைத்து வழிபட வேண்டும் அதற்க்கு முன்பு வெற்றிலையை குலதெய்வத்தின் முன் வைத்து வழிபட வேண்டும்.