தஞ்சாவூர்: வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 203வது பிறந்தநாளை ஒட்டி தஞ்சையில் உலக அமைதி விழா பேரணியாக கொண்டாடப்பட்டது
வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் பிறந்த நாளை தஞ்சையில் வள்ளலாரின் பக்தர்கள் உலக அமைதி விழாவாக கொண்டாடினர். இதை ஒட்டி வள்ளலாரின் திருவுருவப்படத்துடன் வள்ளலாரின் கோட்பாடுகளான சூது, பொறாமை, வஞ்சகம் ஒழித்து, அன்புடனும், கருணையுடனும் வாழ்வோம் என்பதை வலியுறுத்தி அமைதி விழா பேரணி தஞ்சை நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது
பின்னர் தஞ்சை வள்ளலார் பணியகம் நிர்வாகத் தலைவர் சுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் 203 வது பிறந்தநாள் விழாவை உலக அமைதி விழாவாக கடைபிடித்து வருகிறோம். வடலூர் சத்தியஞான சபைக்கு சொந்தமான பெருவெளி மைதானத்தில் தான் தைப்பூசம் திருநாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ஜோதி தரிசனம் செய்வர்
அந்த பெருவெளி மைதானத்தை சர்வதேச மையமாக உருவாக்க கூடாது. பெருவெளியாகவே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.