மேஷம்: குவிந்து வந்த உங்களின் செலவுகள் குறையும். சவாலான காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு இருந்த தேவையற்ற பழி நீங்கும்.
ரிஷபம்: எதிரிகளை வெல்லும் ஆற்றல் பெறுவீர்கள். கடுமையாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். உங்கள் வருமானம் சேமிக்கும் அளவிற்கு அதிகரிக்கும். உங்கள் துணையின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். பழைய சொத்துக்களை எதிர்பார்த்த விலைக்கு விற்பீர்கள். பெரிய மனிதர்கள் மற்றும் வெற்றிகரமான நபர்களின் நட்பைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்கும்.
கடகம்: குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுக்கவும். குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். கூட்டாளிகளுடன் இணக்கமான அணுகுமுறையைப் பேணுங்கள். தொழில் வளம் பெறும்.
சிம்மம்: பழைய நினைவுகளில் மூழ்கி இருப்பீர்கள். சிலர் நன்றி சொல்ல மறந்து விடுவார்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களைப் பாராட்டுவார். உங்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.
கன்னி: வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நீங்கள் தந்தைவழி சொத்துகளைப் பெறலாம். மூத்த சகோதரர்கள் உங்களுக்கு பண உதவி செய்வார்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் நீங்கள் தேடும் ஆவணம் கிடைக்கும்.
விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் விஷயமாக பயணம் மேற்கொள்வீர்கள்.
தனுசு: குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். விருந்தினர்கள் வருகை தருவார்கள். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் உரிய முறையில் செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.
மகரம்: எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் வீட்டில் சேதமடைந்த பொருட்களை மாற்றி புதிய பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
கும்பம்: புதிய நபர்களை சந்திப்பீர்கள். உங்களுக்கு தேவையான பணம் கிடைக்கும். எதிர்காலத்திற்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கு சாதகமாக முடியும். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மீனம்: புத்திசாலித்தனமாக செலவு செய்து சேமிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் அமைதியை கடைபிடிப்பது நன்மை தரும்.