சென்னை: கங்கை அமரன், ரோஜா உள்ளிட்டோர் நடித்துள்ள லெனின் பாண்டியன் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், அக்டோபர் 16 முதல் ஓடிடியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பார்க்கக் கிடைக்கிறது.
டி.டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் கங்கை அமரன் வயதான விவசாயியாகவும், தார்ஷன் கணேசன் இளம் காவலராகவும் நடித்துள்ளனர். ரோஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனான தார்ஷன் கணேசனுக்கு இப்படம் நடிப்புத் துறையில் முக்கியமான படமாக அமைந்துள்ளது.
மணல் கொள்ளை தொடர்பான பிரச்சினை, கிராமப்புற மக்களின் வாழ்க்கை மற்றும் காவல்துறையின் பொறுப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
