By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மோதலில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    ஈரான் போரில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    1 Min Read
    விமானத்தில் பயணி அட்டகாசம்: சக பயணிகளை தாக்கியதால் விமானம் பால்டிமோருக்கு திருப்பிவிடப்பட்டது
    2 Min Read
    போருக்கான கூடுதல் வருவாயை திரட்ட ஆபாச தொழிலுக்கு சட்ட அங்கீகாரமா? உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
    7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்
    1 Min Read
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஏராளமான உயிர்ச்சத்துகள் அடங்கிய வல்லாரை கீரை!!
    1 Min Read
    கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கா… அப்போ அது போலி!
    1 Min Read
    ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்
    1 Min Read
    சிறைக்குள் 10 நிமிட போனுக்கு ரூ.28? கட்டணத்தை குறைக்கக் கோரி வழக்கு; சிறைத்துறை டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    1 Min Read
    2016 தாக்குதல் வழக்கில் விருதுநகர் எம்.எல்.ஏ உள்பட 4 பேர் விடுதலை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க வாய்ப்பு?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க வாய்ப்பு?
சினிமா

சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க வாய்ப்பு?

Nagaraj
Last updated: September 8, 2026 5:29 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘அமரன்’ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக ‘சேயோன்’ உருவாகி வருகிறது. ‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார்.

மதுரை மண்ணின் பாரம்பரியம் மற்றும் கிராமத்து வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், முழுமையான கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகி வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், கன்னட திரைப்பட உலகின் பிரபல நடிகரும் இயக்குநருமான ராஜ் பி.ஷெட்டியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ‘சேயோன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள், ஆக்சன் காட்சிகள் மற்றும் குடும்ப பின்னணியிலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், படத்தில் சீமான் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மதுரையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அவர் விரைவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ‘எல்ஐகே’ திரைப்படத்தில் சீமான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதிலும், சீமான் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

You Might Also Like

11-ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்: ஆணவக் கொலை சந்தேகத்தில் கொந்தளிக்கும் குடும்பம் – கனிமொழி கண்டனம்

“இந்தி தேசிய மொழி” சர்ச்சை: தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார்

மணிரத்னம் இயக்கத்தில் ‘இஞ்சி வெல்லம்’: விஜய் சேதுபதி – சாய் பல்லவி ஜோடி; 2027 ஜனவரியில் வெளியாகிறது

இளையராஜா ஆசியுடன் தொடங்கியது ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு: மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய கூட்டணி

டீப் ஃபேக் வீடியோ விவகாரம்: நடிகை ஸ்ருதிஹாசன் நீதிமன்றத்தை நாடினார்!

TAGGED:MaduraiRaj Kamal FilmsSeemanSeiyon MovieSivakarthikeyantamil cinemaசிவகார்த்திகேயன்சீமான்சேயோன் திரைப்படம்தமிழ் சினிமாமதுரைராஜ்கமல் பிலிம்ஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?