நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் மணிரத்னம் மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவரும் கடைசியாக 2004-ம் ஆண்டு வெளியான ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன்பிறகு சுமார் 22 ஆண்டுகளாக இருவரும் மீண்டும் இணையும் வாய்ப்பு உருவாகவில்லை.
தற்போது மணிரத்னம் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சூர்யா ‘சீன்’ படத்தின் வெளியீட்டுக்காக தயாராகி வருகிறார். இதற்கிடையே இருவரும் மீண்டும் இணைவது தொடர்பான தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், சூர்யா–மணிரத்னம் கூட்டணி மீண்டும் உருவானால் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
