சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகன் ஏ.ஆர்.அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார்.
இன்று அதிகாலை கோயம்பேட்டில் இருந்து தனது நண்பர் பார்கவுடன் சொகுசு காரில் அமீன் சென்று கொண்டிருந்தார். கார் கத்திப்பாரா மேம்பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த கால் டாக்சி மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஏ.ஆர்.அமீன், அவரது நண்பர் பார்கவ் மற்றும் கால் டாக்சி ஓட்டுநர் ஆகியோர் லேசான காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
23 வயதாகும் ஏ.ஆர்.அமீன், சிறுவயதிலேயே தனது தந்தை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் பாடகராக அறிமுகமானவர். ‘ஓகே கண்மணி’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார்.
விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
