கர்நாடகா: ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பிக்காசோ’ விரைவில் திரைக்கு வர உள்ளது.
கவுதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வலுவான நட்சத்திரக் கூட்டணி
அபிஷன் ஜீவிந்துடன் ஷிவானி நாகரம், யோகலட்சுமி, கானா வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“வாழ்நாள் அதிர்ஷ்டம்”
சிவராஜ்குமாருடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து அபிஷன் ஜீவிந்த் கூறுகையில், “திரையில் பார்த்து வியந்த சிவராஜ்குமாருடன் இணைந்து நடிப்பது என் வாழ்நாள் அதிர்ஷ்டம். அவரது அனுபவம் நிச்சயம் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். அனைத்து தரப்பினரும் கொண்டாடும் திரைப்படமாக இது அமையும்” என்றார்.
படம் விரைவில் திரைக்கு வர உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
