கேரளா: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, சண்டைக் காட்சிகளை அன்பறிவ் வடிவமைத்துள்ளனர்.
அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் ஒருவர் தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் ஜாம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘அருகே அருகே அவளும் வந்தாலே’ ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், தற்போது 2-வது பாடலான ‘லுசர்’ பாடலும் வெளியாகியுள்ளது. புதிய பாடல் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
