சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘மொழியே’ வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்தள்ளது.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சினி ஒன் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
அடுத்தடுத்து வெளியான அப்டேட்கள்
படத்தின் முதல் பாடலான ‘செல்ல மகளே’ ஏற்கெனவே வெளியாகி கவனம் பெற்றது. இதைத் தொடர்ந்து டீசர், இரண்டாவது பாடல் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகின.
இந்த நிலையில், படத்தின் மூன்றாவது பாடலாக ‘மொழியே’ வெளியாகியுள்ளது. பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
