சென்னை: ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில், படத்தின் தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு விலை உயர்ந்த கடிகாரம் மற்றும் யமஹா ஆர்.எக்ஸ்.100 மோட்டார் சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த எதிர்பாராத பரிசால் ஜி.வி. பிரகாஷ் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.
பேண்டஸி த்ரில்லர் கதை
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படத்தை ஏகே ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளது.
டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
பேண்டஸி அம்சங்கள் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகியது.
காதல்… மர்மம்… கொடிய மிருகம்!
ஒரே வீட்டில் பங்கு தாரர்களாக வசித்து வரும் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் காதலித்து வரும் சூழலில், ஒரு மர்மமான சம்பவம் ஜி.வி. பிரகாஷின் வாழ்க்கையை மாற்றுகிறது.
அதன் பின்னணியைத் தேடும் அவர், கொடிய மிருகம் ஒன்றை சந்திக்கிறார். பின்னர் அந்த மர்மத்தின் பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகளை கண்டுபிடிக்கிறார்.
வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நன்றி தெரிவிக்கும் விழாவில் தயாரிப்பாளர் வழங்கிய கடிகாரம் மற்றும் ஆர்.எக்ஸ்.100 பரிசு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
