90களில் தென்னிந்திய சினிமாவை கவர்ந்த நடிகை ரோஜா, தற்போது அரசியலிலும் முன்னேற்றம் பெற்றுள்ளார். இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
சமீபத்திய பேட்டியில், இருவரும் காதலிக்கும்போது 24 குழந்தைகளை பெற்றெடுக்க ஆசைப்பட்டதாக ரோஜா தெரிவித்துள்ளார்.திருமண வாழ்க்கையில் சண்டைகள் இல்லாமல் சீராக வாழ்ந்து வருகின்றனர். குடும்ப உறவுகளை பற்றி பேசும் போது, ரோஜா தனது கணவரிடம் தான் எப்போதும் சண்டை போடுவார் என்றும், அவர் அமைதியாக கையாளுவார் என்றும் கூறினார்.
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால், வீட்டில் தோற்றுப் போக வேண்டும் என்று அவர் கூறினார்.காதலிக்கும்போது 24 குழந்தைகள் பெற்று உலக சாதனை படைக்க வேண்டும் என இருவரும் ஆசைப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், திருமணத்திற்கு முன் ரோஜாவுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக டாக்டர் கூறியதும் நினைவுகூர்ந்தார்.

இந்த செய்தி செல்வமணிக்கு அதிர்ச்சி அளித்தது.திருமணத்திற்குப் பிறகு, ரோஜா கர்ப்பமாகியதும், குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது. முதல் மகனின் பிறப்பு கடவுளின் பரிசாக உணர்ந்ததாக ரோஜா கூறினார்.
இரண்டாவது குழந்தை பிறக்கும்போது கடுமையான பிரச்சினைகளை சந்தித்ததாகவும், கடைசியில் மகிழ்ச்சியாக மகளைக் பெற்றதாகவும் கூறினார்.சினிமா, அரசியல் சாதனைகள் இருந்தாலும், குழந்தைகள் தான் அவர்களுக்கு உண்மையான ஆசை என்று கூறினார்.
குழந்தைகள் விருப்பப்படி வளரவேண்டும் என்பதே தம்முடைய நோக்கம் என ரோஜா கண்மணியுடன் தெரிவித்தார். குழந்தைகளின் விருப்பங்களை மதித்து அவர்களை வளர்த்துவருவதாக தெரிவித்தார்.