சென்னை: STR49 படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியிடப்பட உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிம்பு அடுத்து நடிக்கும் STR49 படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலகலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும். முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் நடிகர் சந்தானம் காமெடியன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு நடிகர் சந்தானம் காமெடியனாக இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் நாயகியாக கயாடு லோஹர் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் STR49 படத்தின் புதிய அப்டேன் இன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமாக டான் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.