மலையாள இயக்குனர் சத்யன் அந்திகாடு இயக்கிய 2003-ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நயன்தாரா. சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அவர், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், அவர் சினிமாவில் 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை அவர் தனது சமூக ஊடகங்களில் அறிவித்து, அதற்காக ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், “22 ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன்முதலில் கேமரா முன் நின்றபோது, திரைப்படங்கள் என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று எனக்குத் தெரியாது.

ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு மௌனமும் என்னை வடிவமைத்தன; என்னை குணப்படுத்தின, என்னை நான் யார் என்று செதுக்கியது.
அதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.