சென்னை; 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படையப்பாவுடன் என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் “ஜெயிலர்.” இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
தற்பொழுது படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. இன்று கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைதொடரில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்த ஷெட்யூல் 35 நாட்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் படத்தில் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் படையப்பா திரைப்படம் வெளியாகி 26 வருடங்கள் நிறைவு, ஜெயிலர் 2 படப்பிடிப்பின் முதல் நாள் என பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் அப்பதிவை பதிவிட்டுள்ளார்.
ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.