சென்னை: சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில் சுசீந்திரன் எழுதி இயக்கியுள்ள படம் ‘2கே லவ் ஸ்டோரி’. படத்தின் வெற்றியை தொடர்ந்து நடைபெற்ற வெற்றி சந்திப்பில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது, நெகிழ்ச்சியுடன் பேசிய சுசீந்திரன், ‘படத்தைப் பார்த்து ‘சுசீந்திரனின் கம்பேக்’ என்று பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், படத்தை 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களுக்கு கொண்டு சென்ற தனஞ்செயன், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணன், எடிட்டர் தியாகு, போஸ்டர் டிசைனர் கார்த்திக், திருப்பூர் தமிழ்மணி, புதுமுக ஹீரோ ஜெகவீர் ஆகியோருக்கு நன்றி.’ விக்னேஷ் சுப்ரமணியன் பேசும்போது, ‘இது என்னுடைய முதல் படம். சுசீந்திரன் உட்பட அனைவருக்கும் நன்றி என அவர் தெரிவித்துள்ளார். ஜெகவீர், லத்திகா, ஹரிதா ஆகியோர் பேசினர். சுசீந்திரன் மற்றும் இசையமைப்பாளர் இமான் இணைந்து பணியாற்றும் 10-வது படம் இது.