விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’வை நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இது ஓடிடியிலும் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தப் படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த நவம்பரில் அங்கு வெளியிடப்பட்டது.
அங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்த மகாராஜா, 2018-க்குப் பிறகு அதிக வசூல் செய்த இந்தியப் படமாக மாறியுள்ளது. இந்தப் படம் சீனாவில் ரூ.91.55 கோடி வசூலித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு நிகழ்வில் பேசிய நிதிலன் சாமிநாதன், “சமீபத்தில் மும்பையில் நடந்த அவரது மகளின் திருமணத்தில் அனுராக் காஷ்யப்பைச் சந்தித்தேன். அந்த நேரத்தில், ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் அலெஜான்ட்ரோ இனாரிட்டு தனது படத்தில் நடிக்க அழைத்ததாகவும், அதற்குக் காரணம் ‘மகாராஜா’ படம் என்றும் அவர் என்னிடம் கூறினார்.
“இதற்கு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார். ‘அமோரஸ் பெரோஸ்’, ‘பேர்ட்மேன்’ மற்றும் ‘தி ரெவனன்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அலெஜான்ட்ரோ இனாரிட்டு இதுவரை 5 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். ‘பேர்ட்மேன்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.